எனது புதிய இணையத்தளத்தில் இனி புதிய பதிவுகளை காணலாம். நன்றி.

எனது புதிய இணையத்தளத்தில்

www.christawan.com



பதிவுகளை இனி காணலாம்.

நன்றி.



08- 02- 2016.

தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். தேவன் உங்களோடு இருக்கிறார்.

யோசேப்பு தான் செய்யாத தவறுக்காக சிறைசாலையில் தள்ளப்பட்டான். 
அங்கும் யோசேப்பை தப்புவிக்கும்படியாய் கர்த்தர் அவனோடு இருந்தார். 
கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான். 
அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.(ஆதி 39:2) 

கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்.(ஆதி 39:21).
 யோசேப்பை கர்த்தர் ஆபத்தில் அவனோடு இருந்து அவனை விடுவித்தார். 
யோசேப்பு பார்வோன் இராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டான். 

பிரியமானவர்களே, பலநேரங்களில் நீங்கள் பிரச்சனைகளையும், போராட்டங்களையும், தீமைகளையும், உங்களுக்கு விரோதமாய் செய்யப்படும் ஆபத்தான காரியங்களையும் சந்திக்கும் போது ஏன் தேவன் என் வாழ்க்கையில் இதை அனுமதித்திருக்கிறார் என்று கலங்குகிறீர்கள் அல்லவா.

இன்றே தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். 
தேவன் உங்களோடு இருக்கிறார். 
நிச்சயமாய் அவர் உங்களை ஆபத்திலிருந்து விடுவிப்பார். 
உங்களைப் பாதுகாப்பார். நீங்கள் உயர்த்தப்படுவீர்கள். 

ஆனால் உங்களுடைய சூழ்நிலையின் மத்தியில் தானியேலைப்போலவும், 
யோசேப்பை போலவும் உண்மையுள்ளவர்களாய் இருங்கள். 
நீங்கள் விடுவிக்கப்பட்டு கனப்படுத்தப்படுவீர்கள். 

தேவன் உங்கள் ஆபத்தில் ஆதரவாய் இருப்பார்!
நீங்கள் தேவனுக்கு சாட்சியாய் இருப்பீர்கள்.
தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். 
தேவன் உங்களோடு இருக்கிறார்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 
0

பூஜ்யங்களை நாம் எழுதும்போது அதற்கு மதிப்பு இல்லை.  

10

100

1000

10000

100000

1000000

10000000

ஆனால் பூஜ்யத்திற்கு முன்னால ஒன்றாம் எண்ணை இணைக்கும் போது அது பத்தாகவும், நுறாகவும், ஆயிரமாகவும்.... உரிய மதிப்பைப் பெறும்.  

அதுபோல நாம்முடைய முயற்சிகள் எல்லாம் வெறும் பூஜ்யமே, ஆனால் அதற்கு முன்னால கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை வைப்போமென்றால் பூஜ்யங்கள் மதிப்பைப் பெறுகிறதுபோல நம்முடைய முயற்சிகள் ஆசிர்வதிக்கப்படும், கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.  

"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்" (மத் 6:33)

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; 

அவன் உத்தமனென்று விளங்கினபின்பு 

கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு 

வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.

உங்களுக்கோர் சமாதானம்!

உங்களுக்கோர் சமாதானம்!

நமது ஆண்டவரும் இரட்சகருமான உயிர்த்தெழுந்த கிறிஸ்து இயேசுவானவர் இவ்விதமாக ஒரு வாக்குதத்தத்தை தமது சீஷர்களுக்கு கொடுத்தார், ‘சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக’ (யோவான் 14:27).
இன்று அநேகர் மரணமடைவதற்கு முன் சில காரியங்களை செய்துவிட்டோ, அல்லது தமது சந்ததிக்கு சில சொத்து சம்பத்துக்களை சேர்த்து வைத்துவிட்டோ போகின்றார்கள். ஆனால் இயேசுவானவர் பல பிரயோசனமான இவ்வாறான விடயங்களை நமக்கென்று வைத்துவிட்டுப் போகாமல், விசேஷமாக சமாதானத்தை தமது சீஷர்களுக்குக் கொடுத்துவிட்டு சென்றார். இது ஏன் என்று நினைக்கிறீர்கள்? ஏனென்றால் இந்த உலகத்திலே எல்லாப் பொருட்களையும், எல்லா உறவுகளையும் எல்லா சம்பத்துக்களையும் எல்லா ராஜ்யங்களையும் எல்லா ஊழியங்களையும்விட சமாதானம்தான் மிகவும் விலை உயர்ந்ததொன்றாக இருக்கின்றது.
இயேசுவானவர் தமது சீஷர்களைப் பார்த்து பேசி, அவருடைய சமாதானத்தை கொடுத்துவிட்டு பரமேறிச் சென்றார். உண்மையாகவே, கடவுளை நாம் அறிந்துகொள்ளும்போது அவர் தருகின்ற சமாதானத்தையும் அதின் நிறைவையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும். அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும், பகிர்ந்தளிக்கவும் முடியும். அவர் போதித்தபடி நாம் மற்றவர்களோடு நல்ல உறவைக் கட்டியெழுப்பவும் முடியும்.
நாம் தேடும் சமாதானம்.
உலகமானது ‘சமாதானத்திற்கான யுத்தம்’ என்றும் ‘பொருளாதார சமாதானம்’ என்றும் ‘மனதை அடக்குவதே சமாதானம்’ என்றும் உலகம், பலவழிகளை தனது சொந்த பெலத்தினால் உலகத்தாருக்கு கற்பித்து ஏமாற்றுகின்றது. இவை சமாதானம் அல்ல. உடற்பயிற்சியோ, யோகா பயிற்சியோ நிரந்தர சமாதானத்தை உங்களுக்குத் தரமுடியாது. பணமோ, பதவியோ, புகழோ அச் சமாதானத்திற்கு ஈடாகாது. கர்த்தர்மேல் நம்பிக்கை வைக்காமல் சமாதானத்தை தேடுகிறவர்கள் கடைசியில் பயங்கரமான நெருக்கடியையும் சிக்கல்களையுமே அனுபவிக்கிறார்கள்.
சரீரத்திற்கு உணவும் ஆத்துமாவுக்கு சமாதானமும் தேவை. அந்த நிரந்தரமான சமாதானத்தை மனிதனாலோ, பிற பொருட்களினாலோ கொடுக்கமுடியாது. அது தேவன் கொடுக்கிற கொடை. வருத்தத்தோடே ஆடம்பரமான உணவை சாப்பிடுவதைவிட சமாதானத்தோடே கஞ்சியைக் குடிப்பது மேன்மையானது. சண்டைக்காரியோடே ஒரு வீட்டில் குடியிருப்பதைக் காட்டிலும் மூலையில் சமாதானமாக குந்தியிருப்பதுமேல். அதனை உப்பு சப்பற்ற ஜெபத்தின் மூலமோ, தியானத்தின் மூலமோ, பெறமுடியாது. நிம்மதி, சந்தோஷம், அன்பு, சமாதானம் இல்லாமல் நாம் எவ்வளவுதான் ஊழியம் செய்தாலும், ஜெபித்தாலும் அதினால் பயனொன்றுமில்லை.
கிறிஸ்து தரும் சமாதானம்.
மெய் சமாதானத்தைத் தங்கள் வாழ்க்கையில் பெற்றுக்கொள்ள நீங்கள் கிறிஸ்துவிடம் மட்டுமே செல்லவேண்டும். அவர்தரும் சமாதானத்தினாலேயே நம்மால் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் தேவனிடத்தில் ஜெபிக்கவும் அவருக்கென ஊழியம்செய்யவும் முடியும். ‘உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை.’ (யோவான் 14:27) என்று இயேசு கூறியுள்ளார். பலவிதமான வெளிப்பிரகாரமான சூழ்நிலையின் மத்தியிலும் அசைக்கமுடியாத அமைதியான சமாதானத்தையே கிறிஸ்து மட்டுமே கொடுக்கிறவராக இருக்கின்றார். ஆகவேதான் பவுலடியாரும், ‘சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக’ என்று 1தெச 5:23ல் எழுதுகிறார். இயேசு தருகின்ற சமாதானம் பரிசுத்தம் மிக்கது. சந்தோஷம் மிக்கது. நிரந்தரமானது. நித்தியமானது. அதிலே பொறாமையில்லை. வஞ்சகம் இல்லை. ஏமாற்றுதல் இல்லை. தேவன் தருவது உண்மையான சமாதானம், அது நிரந்தரமான சமாதானம். இயேசுவானவர் இப்ப+மயிலே அவதரித்தபோது, தேவதூதர்கள் ‘ப+மியின்மேல் சமாதானம்” (லூக்கா 2:11) என்று பாட்டுபாடி போற்றியதற்கு காரணம் இதுதூன். இயேசு ஊழியம் செய்தநாட்களில் பிணியாளிகளை சொஸ்தமாக்கி பாவம் மன்னிக்கப்பட்டவர்களாய் அவர்களை ‘சமாதானத்தோடே போ’ (லூக்கா 7:50) என்று கூறி அனுப்பியதன் காரணமும் அதுதான்.
கிறிஸ்து ஒருவரே சமாதானத்தின் காரண கர்த்தா. அவர் தாமே மரிப்பதற்கு முன் சீஷர்களுக்கு சமாதானத்தைக் கொடுத்தார். அவர்களின் உபத்திரவத்தின் மத்தியிலும், சஞ்சலங்களின் நடுவிலும் அந்த சமாதானமே அருமருந்தாக அமைந்தது. அவர் உயிர்த்தெழுந்த பின்னும் உங்களுக்கு ‘சமாதானம் உண்டாவதாக’ என்று கூறி காட்சியளித்தார். ஆகமொத்தத்தில், ‘சமாதான காரணரான கிறிஸ்து இயேசுவையே’ சீஷர்களும் நற்செய்தியாக பிரசங்கித்தார்கள். (எபேசியர் 6:15).
இன்று கடவுளோடும், சமூகத்தோடும், இயற்கையோடும், தனக்குள்ளும் சமாதானமின்றி, பலவிதமான சிந்தனைகளினாலே அலைக்கழிக்கப்படுகின்ற சகோதர, சகோதரியே, கிறிஸ்துவிடம் வா. அவர் தரும் சமாதானத்தைப் பெற்றுக்கொள். உன் குடும்பத்திலே, உன் உறவுகளிலே, உன் தனிப்பட்ட வாழ்விலே அவர் தருகின்ற சமாதானத்தை அனுபவி. கிறிஸ்துவிடம் உன்னை அர்ப்பணி. அவர் தரும் சமாதானம் ஒன்றே மெய்யான பாதுகாப்பின் வழி!
‘எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம்’ என்று பவுலும் அதை வலியுறுத்துகிறார். தேவன் தருகின்ற சமாதானமானது இன்பமானது. சுகமானது. தீங்கு அற்றது. வாழ்விக்கக்கூடியது. அனுபவிக்கத்தக்கது. அதை பெற்றுக்கொண்டு அனுபவிப்பவர்களுக்கே அதன் தாற்பரியம் புரியும்.
இ.இ.வஷ்னீ 

கடமை

அனைத்தும் மாயை என்று கூற முடியாது. காரணம் தேவன் என்னைத் தாங்குகின்றார். அவர் என்னை வழிநடத்துகின்றார் என்பதை மாத்தரம் என்னால் உணரக்கூடியதாக இருக்கின்றது. ஆகவே எல்லாவற்றிற்காகவும் தேவனுக்கு நன்றியைச் செலுத்துகின்றேன். தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள். எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. என்பதை நான் உண்மையென உணருகின்றேன். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
more details : click here

நீ பயப்படாதே! என் செல்லமே!

நீ பயப்படாதே! என் செல்லமே!

இ. இ. வஷ்னீ ஏனர்ஸ்ட்.

















வழிதெரியாமல் நீ எங்காவது தடுமாறுவாயானால்,
ஆபிரகாமின் தேவன் உன்னை வழிநடத்துவார்.
பயப்படாதே!
பலிகடாவாக நீ பலியிடப்படுவாயானால்,
ஈசாக்கின் தேவன் உன்னுடன் இருக்கிறார். பயப்படாதே!




உன் சகோதரர்களினாலே நீ வெறுக்கப்படுவாயானால்,
யாக்கோபின் தேவன் உன்னருகில் இருக்கிறார்.
பயப்படாதே!
தனிமையில் புறக்கணிக்கப்பட்டு இருப்பாயானால்,
யோசேப்பின் தேவன் உன்னை உயர்த்துவார். பயப்படாதே!

நடக்கின்ற காரியங்களினால் நீ குற்றஞ் சாட்டப்படுவாயானால்,
மேசேயின் தேவன் மகத்தான காரியங்களைச் செய்வார். பயப்படாதே!
அதைரியமடைந்து தோல்வியடைவாய் என உணர்ந்தால்,
யோசுவாவின் தேவன் உன்னைக் கைவிடுவதில்லை.
பயப்படாதே!

பெலவீனமடைந்து நீ தோல்வியும் நிலையில் இருந்தால்,
சிம்சோனின் தேவன் உன்னைப் பெலப்படுத்துவார்.
பயப்படாதே!
பணமோ பாதுகாப்போ இல்லையே என்பாயாகில்,
எலியாவின் தேவன் தேவைகளைச் சந்திப்பார்.
பயப்படாதே!

கோலியாத் போன்ற பிரச்சனைகளை நீ எதிர்க்க நேரிட்டாலும்,
தாவீதின் தேவன் உனக்காகப் போராடுவார். பயப்படாதே!
கிண்டல் கேலிக்குட்பட்டு நீ முட்டாளாக்கப்பட்டாலும்,
சாலமோனின் தேவன் உனக்கு ஞானத்தைக் கொடுப்பார். பயப்படாதே!

நீ அக்கினிக்குள்ளாகவும் சோதனைக்குள்ளாகவும்
செல்ல நேரிட்டாலும், கைதுசெய்யப்பட்டாலும்,
சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோவின் தேவன் என்றும்



உன்னுடன் உலா வருவார். நீ பயப்படாதே என் செல்லமே!