இ. இ. வஷ்னீ ஏனர்ஸ்ட்.

வழிதெரியாமல் நீ எங்காவது தடுமாறுவாயானால்,
ஆபிரகாமின் தேவன் உன்னை வழிநடத்துவார். பயப்படாதே!
பலிகடாவாக நீ பலியிடப்படுவாயானால்,
ஈசாக்கின் தேவன் உன்னுடன் இருக்கிறார். பயப்படாதே!
ஆபிரகாமின் தேவன் உன்னை வழிநடத்துவார். பயப்படாதே!
பலிகடாவாக நீ பலியிடப்படுவாயானால்,
ஈசாக்கின் தேவன் உன்னுடன் இருக்கிறார். பயப்படாதே!
உன் சகோதரர்களினாலே நீ வெறுக்கப்படுவாயானால்,
யாக்கோபின் தேவன் உன்னருகில் இருக்கிறார். பயப்படாதே!
தனிமையில் புறக்கணிக்கப்பட்டு இருப்பாயானால்,
யோசேப்பின் தேவன் உன்னை உயர்த்துவார். பயப்படாதே!
நடக்கின்ற காரியங்களினால் நீ குற்றஞ் சாட்டப்படுவாயானால்,
மேசேயின் தேவன் மகத்தான காரியங்களைச் செய்வார். பயப்படாதே!
அதைரியமடைந்து தோல்வியடைவாய் என உணர்ந்தால்,
யோசுவாவின் தேவன் உன்னைக் கைவிடுவதில்லை. பயப்படாதே!
பெலவீனமடைந்து நீ தோல்வியும் நிலையில் இருந்தால்,
சிம்சோனின் தேவன் உன்னைப் பெலப்படுத்துவார். பயப்படாதே!
பணமோ பாதுகாப்போ இல்லையே என்பாயாகில்,
எலியாவின் தேவன் தேவைகளைச் சந்திப்பார். பயப்படாதே!
கோலியாத் போன்ற பிரச்சனைகளை நீ எதிர்க்க நேரிட்டாலும்,
தாவீதின் தேவன் உனக்காகப் போராடுவார். பயப்படாதே!
கிண்டல் கேலிக்குட்பட்டு நீ முட்டாளாக்கப்பட்டாலும்,
சாலமோனின் தேவன் உனக்கு ஞானத்தைக் கொடுப்பார். பயப்படாதே!
நீ அக்கினிக்குள்ளாகவும் சோதனைக்குள்ளாகவும்
செல்ல நேரிட்டாலும், கைதுசெய்யப்பட்டாலும்,
சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோவின் தேவன் என்றும்
உன்னுடன் உலா வருவார். நீ பயப்படாதே என் செல்லமே!
No comments:
Post a Comment