தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். தேவன் உங்களோடு இருக்கிறார்.

யோசேப்பு தான் செய்யாத தவறுக்காக சிறைசாலையில் தள்ளப்பட்டான். 
அங்கும் யோசேப்பை தப்புவிக்கும்படியாய் கர்த்தர் அவனோடு இருந்தார். 
கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான். 
அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.(ஆதி 39:2) 

கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்.(ஆதி 39:21).
 யோசேப்பை கர்த்தர் ஆபத்தில் அவனோடு இருந்து அவனை விடுவித்தார். 
யோசேப்பு பார்வோன் இராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டான். 

பிரியமானவர்களே, பலநேரங்களில் நீங்கள் பிரச்சனைகளையும், போராட்டங்களையும், தீமைகளையும், உங்களுக்கு விரோதமாய் செய்யப்படும் ஆபத்தான காரியங்களையும் சந்திக்கும் போது ஏன் தேவன் என் வாழ்க்கையில் இதை அனுமதித்திருக்கிறார் என்று கலங்குகிறீர்கள் அல்லவா.

இன்றே தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். 
தேவன் உங்களோடு இருக்கிறார். 
நிச்சயமாய் அவர் உங்களை ஆபத்திலிருந்து விடுவிப்பார். 
உங்களைப் பாதுகாப்பார். நீங்கள் உயர்த்தப்படுவீர்கள். 

ஆனால் உங்களுடைய சூழ்நிலையின் மத்தியில் தானியேலைப்போலவும், 
யோசேப்பை போலவும் உண்மையுள்ளவர்களாய் இருங்கள். 
நீங்கள் விடுவிக்கப்பட்டு கனப்படுத்தப்படுவீர்கள். 

தேவன் உங்கள் ஆபத்தில் ஆதரவாய் இருப்பார்!
நீங்கள் தேவனுக்கு சாட்சியாய் இருப்பீர்கள்.
தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். 
தேவன் உங்களோடு இருக்கிறார்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 

No comments: